Posts

Showing posts from August, 2011

களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள்

Image
-முனைவர் பா.ஜம்புலிங்கம் 1993 முதல் பௌத்த ஆய்வு தொடர்பாக புத்தர் சிற்பங்களைத்தேடி களப்பணி சென்றபோது கண்டுபிடிக்கப்பட்ட சமணர் சிற்பங்கள்  1.கங்கைகொண்டசோழபுரம் 2.காரியாங்குடி 3.கோட்டைமேடு 4.பெருமாத்தூர் 5.செங்கங்காடு 6.தஞ்சாவூர் 7.அடஞ்சூர் 8.செருமாக்கநல்லூர் 9.சுரைக்குடிப்பட்டி 10.பஞ்சநதிக்குளம் 11.தோலி (நவம்பர் 2011) 1 முதல் 6 வரை    (மேற்கோள்) புத்தரது சிற்பங்களைத் தேடிக் களப்பணிக்குச் சென்றபோது கங்கைகொண்டசோழபுரம் (உயரம் 20"), திருவாரூர் வட்டம் தப்ளாம்புளியூர் அருகே காரியாங்குடி (16"), புதுக்கோட்டை ஆலங்குடிப்பட்டி அருகேயுள்ள கோட்டைமேடு (40"), திருத்துறைப்பூண்டி வட்டம் செங்கங்காடு (16"), குன்னம் வட்டம் பெருமத்தூர் (24"), தஞ்சாவூர் மேலவீதி வடக்குவீதி சந்திப்பில் மூல அனுமார் கோயில் பின்புறம் (34") போன்ற இடங்களில் பல அளவிலா சமணர் சிற்பங்களைக் காணமுடிந்தது. கோட்டை மேட்டில் இச்சமணரை சிவநாதர் என்று கூறுகின்றனர். செங்கங்காட்டில் புத்தர் என்று கூறி வழிபாடும் செய்து வருகின்றனர். (பா.ஜம்புலிங்கம், சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் பட்ட ஆய்வேட