Posts

Showing posts from August, 2012

பௌத்த சுவட்டைத் தேடி : கண்டிரமாணிக்கம்

Image
மறுபடியும் மிக அழகான புத்தர் சிற்பத்தைக் காணும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. இந்த சிற்பம் சோழ நாட்டில் காணப்படுகின்ற 66ஆவது புத்தர் சிற்பமாகும். நான் பார்த்த பெரிய சிற்பங்களில் இதுவும் ஒன்றாகும். கடந்த வாரம் இச்சிற்பத்தைப் பார்த்தபோது பெற்ற பிரமிப்பையும், தற்போது இச்சிற்பம் உள்ள நிலையை அறிந்தபின் பெற்ற வேதனையையும் பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறேன். வாருங்கள் கண்டிரமாணிக்கம் செல்வோம். 23 ஜூலை 2012 கண்டிரமாணிக்கம் அருகே புத்தர் சிற்பம் இருப்பதாகத் தனக்குத்தகவல் வந்துள்ளதாக வரலாற்றறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்ரணியம் அவர்கள் தெரிவித்தார். மறுநாளே அவருடன் அங்கு செல்லும் அரிய வாய்ப்பு கிடைத்தது. 24 ஜூலை 2 012  திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திலுள்ள கண்டிரமாணிக்கம் என்னும் ஊருக்கு மகிழ்வுந்தில் சென்றோம். குறிப்பிட்ட இடத்தை நெருங்கும்போது தினத்தந்தி நிருபர் திரு சிவராமன் மற்றும் ஊராட்சிமன்றத் தலைவர் திரு காளிமுத்து ஆகியோர் எங்களுடன் சேர்ந்துகொண்டனர். புத்தர் சிற்பம் இருந்த இடத்திற்கு எங்களை அவர்கள் அழைத்துச்சென்றனர். மேட்டுத்தெருவில் திரு மணிகண்டன் வீட்டுக் கட்டமா